Rain: இன்று இந்த 11 மாவட்டத்தில் கனமழை…! வானிலை கொடுத்த எச்சரிக்கை…!

rain

நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 19, 20-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 80 டிகிரி முதல் 96 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

Tn Govt: மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி...!

Thu Jul 17 , 2025
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான தமிழக அரசு வழங்கும் பயிற்சி வகுப்பு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 23.07.2025 முதல் 25.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் […]
Tn Govt 2025

You May Like