காலை 10 மணி வரை இந்த 14 மாவட்டத்தில் கனமழை…! சற்றுமுன் வானிலை மையம் அப்டேட்….!

tn rains new

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 470 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது..

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக இன்று இரவில் கரையைக்கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Vignesh

Next Post

மீண்டும் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு..!! மக்களின் நிலைமை என்ன..?

Tue Oct 28 , 2025
மேற்கு துருக்கியில் நேற்றிரவு 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே சேதமடைந்திருந்த குறைந்தது 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்தர்கி (Sindirgi) என்ற நகரத்தில் சுமார் 5.99 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த தகவலின்படி, சிந்தர்கியில் மக்கள் வசிக்காத 3 கட்டிடங்களும் ஒரு இரண்டு மாடிக் கடையும் […]
earthquake 165333220 16x9 1

You May Like