இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், 19-ம் தேதி ஒரு சில இடங்களிலும், 20 முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திலும், 19ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடு்ம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் கூடுதல் பாடங்களில் தனித்தேர்வராக தேர்வெழுத முடியாது...!

Wed Sep 17 , 2025
தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]
school

You May Like