50 கி.மீ வேகத்தில் காற்று.. 2 மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…!

cyclone rain 2025

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 30-08-2025 முதல் 02-09-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். ஆந்திரா ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள், வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இடது காலில் கருப்பு கயிறு கட்டும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா..?

Thu Aug 28 , 2025
தற்போதைய இளைய தலைமுறை பெண்கள், காலில் கருப்பு கயிறு அணிவது பரவலாக இருந்து வருகிறது. ஆனால், இது அழகுக்கான அலங்காரமல்ல. இதன் பின்னால் பழமையான மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன. பண்டைய தமிழ் சமூகத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடலைத் தீய ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருப்பு கயிறை அணிந்தனர். மரபின்படி, பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கருப்பு கயிறை கட்டுவது […]
Astro 2025

You May Like