புரட்டி எடுத்த கனமழை..!! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்..!! உரிமையாளர் கதறல்..!!

சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதற்குள் காரில் சென்ற இளம்பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் இருந்த நகைக் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதில் கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடையில் இருந்த 80% நகைகள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளது. நகைகளை மீட்பது தொடர்பாக மாநகராட்சியிடம் நகைக்கடை உரிமையாளர் உதவி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

தங்கம் விலை அதிரடி சரிவு! நகை வாங்க சரியான நேரம்!!

Fri May 26 , 2023
தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்க தயக்கம் காட்டினர்.  இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து […]
#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

You May Like