Alert: இன்று அதிகனமழைக்கான எச்சரிக்கை… 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…!

cyclone rain 2025

தமிழகத்தில் தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 6, 7 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 8, 9 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 10-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 6-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 8-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆகஸ்டில் பேரழிவு!. வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும்!. பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

Tue Aug 5 , 2025
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் […]
Baba Vangas double fire prediction 11zon

You May Like