Yellow Alert: இன்று இந்த 7 மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

cyclone rain 2025

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 8-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 9-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், 10-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2026-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 4,000 மினி கிளினிக் திறக்கப்படும்...! இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி...!

Sat Sep 6 , 2025
தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேசிய அவர்: ஆண்டிபட்டி தொகுதிக்கு என்று தனி வரலாறு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரசியல் வரலாற்றிலேயே […]
whatsappimage2021 02 19at186 1613745627

You May Like