மக்களே..! இந்த 8 மாவட்டத்தில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை…! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

rain 2025 2

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி உருவாகக்கூடும். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையிடையே 60 கி.மீ. அளவில் காற்றின் வேகம் இருக்கும். தெற்கு கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோயிலில் தேங்காய் ஏன் உடைக்கிறோம்?. அழுகியிருந்தால் அபசகுணமா?.

Sat Aug 23 , 2025
பொதுவாக நாம் எல்லோரும் கோவிலுக்குப் போகின்ற பொழுது, முதலில் வாங்குவது அர்ச்சனைப் பொருள்கள் தான். குறிப்பாக, பூ, கற்பூரம், தேங்காய், பழங்கள் தான். அதில் தேங்காயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் மேலிருந்தே பார்த்து நல்லதா வாங்கி விட முடியும். ஆனால் தேங்காயை மட்டும் அப்படி பார்த்து வாங்க முடியாது. தேங்காய் உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், முற்றிய தேங்காயா இல்லை இளம் தேங்காயா […]
Rotten Spoiled Coconut 11zon

You May Like