16-ம் தேதிக்கு மேல் ஆரம்பம்… 6 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

rain school holiday

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கருக்கு கடந்து செல்லக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மறுதினம் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 19-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 17-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 18-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், 19-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 17-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஒரு நாளைக்கு இதயம் எவ்வளவு இரத்தத்தை பம்ப் செய்கிறது?. இரத்த ஓட்டம் ஏன் முக்கியமானது?.

Sun Sep 14 , 2025
இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது. ஒரு கணம் கூட வேலை செய்வதை நிறுத்தினால், அந்த நபர் இறந்துவிடுவார். சுமார் 300 கிராம் எடையுள்ள இந்த உறுப்பு, தொடர்ந்து இரத்தத்தை பம்ப் செய்து கொண்டே இருக்கும். ஆக்ஸிஜன் இல்லாத இரத்தம் முதலில் இதயத்தின் வலது பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து நுரையீரலை அடைந்து ஆக்ஸிஜனால் நிரப்பப்பட்டு, பின்னர் இடது பக்கம் வழியாக முழு உடலின் உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த செயல்முறை […]
blood heart pump

You May Like