கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

heavy rain

தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 17, 18 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்கள், நாளை மறுநாள் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 16-ம் தேதி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கரூர் துயரம்!. இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?.

Mon Oct 13 , 2025
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் […]
Karur TVK verdict today SC

You May Like