Rain: வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டத்தில்…?

rain 2025 2

தமிழகத்தில் இன்று முதல் 7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், கன முதல் மிக கனமழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 4-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மறறும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 6-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 7-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 5-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

1 ரூபாய்க்கு BSNL 4 ஜி சிம் கார்டு... அட்டகாசமான அறிவிப்பு...! எப்படி வாங்குவது தெரியுமா...?

Sat Aug 2 , 2025
இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘சுதந்திர தின திட்டத்தை’ ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த முயற்சி, இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவில் […]
bsnl 2025

You May Like