Rain: கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை…!

cyclone rain 2025

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று, கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 27, 28-ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more: 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்!. அவசர நிலை பிரகடனத்தை எதிர்கொண்ட இந்தியா!. இருளில் மூழ்கிய தேசம்!. பின்னணி இதோ!

Vignesh

Next Post

2026 முதல் 10 ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு!. CBSE ஒப்புதல்!. முழுவிவரம் இதோ!

Thu Jun 26 , 2025
2026ம் கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. […]
cbse

You May Like