ADMK: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு…!

பொதுப்பணிகளை தனிப்பட்ட ஆதாயங்களுக்காக நிறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மிரட்டியதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் மற்றும் 4 பேர் மீது புகார் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகரும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்பதாலும், பாலம் அமைக்கக் கூடாது என தொழிலாளர்களை மிரட்டியதோடு, ஜே.சி.பி.யையும் பயன்படுத்தி பணியை முடக்கினார்.

விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் மற்றும் 3 பேர் மீது ஐபிசி 147, 341, 353, மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடுதல் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, இது ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அணுகுமுறையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். மனுதாரர் மீது நிலுவையில் உள்ள 27 வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Vignesh

Next Post

உஷார்!...ஹேர் கலரில் மறைந்திருக்கும் ஆபத்து!... என்ன தெரியுமா?

Thu Apr 11 , 2024
Hair color: தலைமுடியைக் கட்டி மலையைக்கூட இழுக்கலாம் என்ற பழமொழி பெண்களுக்கு மட்டுமல்ல. அந்தகாலத்தில் தலைமுடிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெந்தயமும், கரம்பை மண்ணும் தான் அவர்களின் ஷாம்புகளாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. முன்பெல்லாம் வெள்ளை முடியை மறைக்க டை அடிப்பார்கள். அதை பலர் வீட்டிலேயே செய்துகொள்வார்கள். இப்போது வெள்ளை முடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழகுக்காக வண்ணங்கள் கொண்ட ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். இது ஸ்டைலான […]

You May Like