தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..


இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,640-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.62.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400-க்கு விற்பனையாகிறது..

RUPA

Next Post

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு..! இன்றே கடைசி நாள்..! உடனே இதை செய்து விடுங்கள்..!

Thu Sep 22 , 2022
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முதல் சுற்றுக்கு கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று […]
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு..! இன்றே கடைசி நாள்..! உடனே இதை செய்து விடுங்கள்..!

You May Like