உங்கள் EPFO இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் மொபைல் எண் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் பெறலாம்.
அதேபோல, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், தங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் பிஎஃப் கணக்கு இருப்புத் தகவல் சிறிது நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும்.
மேலும் நீங்கள் SMS வசதி மூலம் சரிபார்க்கலாம். இந்த வசதியைப் பெற, 77382-99899 என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN’ என்று SMS செய்ய வேண்டும். SMS செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் பிஎஃப் கணக்கு இருப்புத் தகவல் உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும்.
அதே போல நீங்கள் https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login இணையதளத்திற்குச் சென்று தங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம்.