மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TNPDCL ) மாதாந்திரக் கட்டண முறையை அமல்படுத்த ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ உள்ளது. இதற்கான டெண்டர் முடிந்து, ஏலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏலம் எடுத்துள்ளன. ஆகஸ்ட் இறுதிக்குள் ஏல மதிப்பீட்டு செயல்முறையை முடிக்க TNPDCL திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் RDSS திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக வணிகப் பிரிவுகள் மற்றும் அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
மொத்தம் 1.44 கோடி மீட்டர்கள் நிறுவப்பட உள்ளன. குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த நிறுவனம் மீட்டர்களை நிறுவி, 93 மாதங்களுக்கு பராமரிக்கும். TNPDCL நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக ஏற்கனவே டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்; மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



