சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
நேற்று மட்டும் சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.. சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் செண்டர், ஆபிசர் பயிற்சி மையம், நேரு உள்விளையாட்டரங்கம், பிஎஸ்என்எல் அலுவலகம், நடிகர் எஸ்.வீ.சேகர் வீடு என 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : Flash : குட்நியூஸ்.. 2 நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கம் விலை இன்று குறைந்தது.. நகைப்பிரியர்கள் நிம்மதி!