கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்கள், பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!!

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வரும் 27ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்கள், பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!!

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை )

இடம்: மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி

பங்குபெறும் நிறுவனங்கள்: உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை (தகவல் துறை), ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்.

காலியிடங்கள்: 15,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை: வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளவிருப்பதால், வேலைத் தேடும் பெண்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

சான்றிதழ்: இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப்புரிய வேண்டும்.

மேலும், இம்முகாமில் வருகைப்புரியும் விண்ணப்பதாரர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் கூடுதலாக பதிவு செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

இந்த தேதியில் வாடிக்கையாளர்கள் யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம்..!! ஸ்டிரைக் அறிவிப்பு..!!

Thu Nov 17 , 2022
நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், “வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில […]
Bank Holidays Banks will be closed for 16 days in December Check out full list of vacations here 1

You May Like