’அந்த கெட்ட வார்த்தைக்கு நானே முழு பொறுப்பு’..!! லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்மையில், இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ட்ரெய்லர் வெளிவந்ததும் இப்படத்தில் தளபதி கெட்ட வார்த்தை பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையில் ஏற்படுத்தியிருந்தது. இதனால் விஜய் பெண்களை இப்படி இழிவாக சொல்லலாமா என்று பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு லோகேஷ் கனகராஜ் எல்லாம் தகுதியே இல்லாத இயக்குனர் என்று ஒருசிலர் விமர்சிக்கவும் செய்தனர். ஏற்கனவே, நா ரெடிதான் பாடல் சர்ச்சையை சந்தித்த சூழலில் தற்போது ட்ரெய்லரும் சந்தித்திருக்கிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் அண்ணா என்னிடம் வந்து கேட்டாரு இந்த வார்த்தை ஒகேவா இதை நான் சொல்லலாமா என்று? நான் அவரை ரெம்பவே Force பண்ணி அண்ணா நீங்கள் இந்த வார்த்தையை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுதான் கதைக்கு கண்டிப்பாக தேவை என சொன்னேன். விஜய் அண்ணா இப்படி பண்ணிடாரே என வருத்தப்பட்டால் அதுக்கு நானே முழு பொறுப்பு என கூறியிருக்கிறார்.

Chella

Next Post

டெங்கு, நிபா வைரஸ் நோய் பாதிப்புகளுக்கு காப்பீடு?… ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய முழுவிவரம் இதோ!

Sun Oct 8 , 2023
கொரோனா, நிபா, டெங்கு, பன்றி போன்ற காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும், ஒவ்வொரு பருவத்திற்கும் நோய்தொற்றுகள் மக்களை துன்புறுத்திவருகின்றன. இதனை எப்படி சமாளிப்பது, என்னென்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் இருக்கலாம்? எந்த ஒரு விஷயத்திற்கும் “வருமுன் காப்போம்” என்ற பழமொழியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது நோய்க்கும் பொருந்தும். நோயிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான […]

You May Like