மாணவர்களே செம குட் நியூஸ்..!! இந்த தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 25ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அதற்கான தேதிகளையும் சமீபத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, கடந்த மூன்று தினங்களுக்கு முன் முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 83 மையங்களில் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருத்துதல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும்.

மேலும், வினாத்தாளில் ஏதேனும் கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டிருந்தால், அந்த கேள்விக்கு பதில் எழுதியுள்ள மாணவர்களுக்கு அதன் முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில் உள்ள 33-வது கேள்வி பிழையாக இருந்துள்ளது. இந்நிலையில், அந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் (3 மதிப்பெண்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : நெருங்கும் தேர்தல்..!! தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நிறுத்தமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

399 இடங்களை கைப்பற்றும் பாஜக கூட்டணி!… காங்., வெறும் 38 இடங்களை மட்டுமே பெறும்!… கருத்துக்கணிப்பு!

Thu Apr 4 , 2024
Election Poll: மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 399 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 342 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 முதல் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெறுவது […]
குஜராத், இமாச்சல் தேர்தலில் இந்த கட்சிதான் வெற்றி பெறும்..!! அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்..!!

You May Like