விஜய்யுடன் நான் செல்போனில் பேசவில்லை…! சர்ச்சைக்கு எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி…!

palaniswami edappadi k pti 1200x768 1

கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். தலைமையின் அனுமதியை பெற்றே வரவேண்டும் என தவெகவினரிடம் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை. கரூர் சம்பவம் நடந்தவுடனே நான் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

எப்போது நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தோமோ, அப்போதிலிருந்தே எங்களை விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் யாரோடு கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன?. திமுகவோடு கூட்டணியில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?. ஆட்சியில் பங்கு, அதிகம் தொகுதிகள் வேண்டும் என திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கேட்க ஆரம்பித்துவிட்டன. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என்றார்.

Vignesh

Next Post

தீராத கடன் தொல்லையா?. இன்று இரவு இத மறந்துடாதீங்க!. மிளகு தீபம் ஏற்றி வழிபடுங்கள்!.

Mon Oct 13 , 2025
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அதில் முக்கியம் மிளகு தீபம். அந்தவகையில் இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம். கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும். […]
Pepper lamp bhairavar

You May Like