எனது மகள்களுக்காக பழிவாங்கிட்டேன்.. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை மகாதேவருக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!

1907883 modi 1

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பகவான் மகாதேவருக்கு அர்ப்பணித்தார்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) 26 பேரைக் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரையும், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் மகாதேவையும் தொடங்கியது.

வாரணாசியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி இதுகுறித்து பேசினார். அப்போது “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை. பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். என் இதயம் துக்கத்தால் நிறைந்தது. என் மகள்களின் சிந்தூரத்திற்கு பழிவாங்குவதாக நான் சபதம் செய்திருந்தேன், மகாதேவின் ஆசிர்வாதத்துடன் அதை நிறைவேற்றினேன்.. “ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை மகாதேவின் பாதங்களில் அர்ப்பணிக்கிறேன்,” என்று கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடி, பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அளித்த பதில், அரசு ஆதரவு பயங்கரவாதத்தில் இஸ்லாமாபாத்தின் பங்கை வெளிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆபரேஷன் மகாதேவ்

‘Operation Mahadev’ இன் கீழ், ஜூலை 28 அன்று இந்தியப் ராணுவம் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஹர்வானுக்கு அருகிலுள்ள லிட்வாஸ் காட்டில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக அமித்ஷ அகூறினார்.. மேலும் மக்களவையில் பேசிய ஷா, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரை தாக்குதலின் முக்கிய திட்டமிடுபவர் சுலைமான் என்று அடையாளம் காட்டினார்.

மற்றவர்கள் ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என பெயரிடப்பட்டனர் – அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த செயல்பாட்டாளர்கள். Operation Sindoor இன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒன்பது பயங்கரவாத மையங்களில் இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது, இது இரு நாடுகளுக்கும் இடையே 3 நாள் இராணுவ மோதலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

தொண்டை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்.. இவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீங்க!

Sat Aug 2 , 2025
தொண்டைப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. புற்றுநோய் என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் அச்சம் ஏற்படும்.. ஆனால், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதாவது, இந்த ஆபத்தான நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நோயாளியின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. தொடர்ந்து வரும் இருமல் மற்றும் தொண்டை வலி பொதுவாக பலரும் இருமல் பிரச்சினையில் […]
w 1280imgid 01fmvwkzqz0jj948hpgdm7w4j4imgname pic jpg

You May Like