நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
இதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்குமும் இல்லை என்று நேற்று இபிஎஸ் கூறிய நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சமீபத்தில் செங்கோட்டையை அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அவரின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது.. தன்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சி தான் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார்..
இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நாளை கட்சி அலுவலகத்தில் விளக்கம் அளிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நாளை காலை 11 மணியளவில் விரிவாக பேசுகிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.. என்னை நீக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்துக்கும் நாளை விளக்கம் தருகிறேன்.. நாளை காலை 11 மணியளவில் கட்சி அலுவலகத்தில் விரிவாக பேசுகிறேன்..” என்று அவர் தெரிவித்தார்..
Read More : Breaking : அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. இபிஎஸ் அதிரடி அறிவிப்பு..



