தொங்கு சட்டசபை வந்தால்.. சபாநாயகர் யார்..? லிஸ்டில் 3 பேர்..! விஜய் யாரை டிக் செய்யப் போகிறார்..?

vijay bussy anand

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..


தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது..

வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக விஜய் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.. எனினும் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை என்பதால் இப்போதைக்கு தொங்கு சட்டசபை உருவாகும் நிலை உள்ளது..

எனவே எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.. தவெக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்டமன்றத்தை சிறப்பாக வழிநடத்தப் போகும் சபாநாயகர் யார் என்ற விவாதம் அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இது தொடர்பாக தவெக தரப்பில் 3 பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது..

ராஜ் மோகன் :

அதில் அடிபடும் முதல் பெயர் ராஜ்மோகன்.. தவெகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றியவர்.. தனது ஆளுமை மற்றும் பேச்சாற்றலால் சட்டமன்றத்தை அமைதியாக வழிநடத்த உதவும் என்று தவெக தலைமை கருதுகிறது.. இவர் சென்னை எழும்பூர் தொகுதியில் 51,131 வாக்குகள் பெற்று தமிழன் பிரசன்னாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்..

செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் சட்டமன்ற மரபுகளை நன்கு அறிந்தவர்.. பலமுறை அமைச்சராகவும், நீண்டகாலம் எம்.எல்.ஏகாவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இவரின் அனுபவம், ஒரு புதிய கட்சி ஆட்சி அமைக்கும் போது அவையை வழிநடத்த உதவும் என்று கருதப்படுகிறது.. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்கவும், அவையை வழிநடத்தவும் செங்கோட்டையன் விஜய்க்கு உதவியாக இருப்பார்.. அவர் கோபிச்செட்டிபாளையத்தில் 86612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்..

புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் நம்பிக்கைக்குரியவராகவும் தவெக பொதுச்செயலாளரகவும் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவர்.. விஜய்யின் நேரடி நம்பிக்கைக்கு பாத்திரமான புஸ்ஸி ஆனந்தை சபாநாயகர் பதவியில் அமர வைப்பதால் அவர் சட்டமண்றத்தின் செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்று விஜய் நினைக்கிறார்.. இவர் தி நகர் தொகுதியில் 51632 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

RUPA

Next Post

எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்.. 34.8% வாக்குகள் பெற்று சரித்திரம் படைத்த தவெக..!

Mon May 4 , 2026
Vijay breaks MGR's record.. AIADMK 33.5% in 1977… Teva 34.8% in 2026..!
mgr vijay2

You May Like