எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்.. 34.8% வாக்குகள் பெற்று சரித்திரம் படைத்த தவெக..!

mgr vijay2

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) அதிரடியான முன்னிலை பெற்று அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழக அரசியல் அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு பெரிய அரசியல் துருவங்களையே மையமாகக் கொண்டு சுழன்று வந்தது. ஆனால் இந்த முறை அந்த அரசியல் வரலாற்றையே மாற்றும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற எம்.ஜி.ஆர் சாதனையை விஜய் முறியடித்துள்ளார். 1977ஆம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலில் அதிமுக 30.4% வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, தவெக சுமார் 38% வாக்குகளைப் பெற்று அந்த வரலாற்றுச் சாதனையை தவெக முறியடித்துள்ளது.

மேலும், 234 தொகுதிகளில் 108 இடங்களில் தவெக முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த பல தசாப்தங்களாக நிலவி வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. இதன் மூலம் தவெக தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கிறது என்ற மதிப்பீடுகள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

மறுபக்கம், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பல முக்கிய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

Read more: தொங்கு சட்டசபை வந்தால்.. சபாநாயகர் யார்..? லிஸ்டில் 3 பேர்..! விஜய் யாரை டிக் செய்யப் போகிறார்..?

English Summary

Vijay breaks MGR’s record.. AIADMK 33.5% in 1977… Teva 34.8% in 2026..!

Next Post

Flash: "புதிதாக பொறுப்பேற்கும் அரசிற்கு வாழ்த்துகள்..!" தவெக பெயரை குறிப்பிடாத உதயநிதி..! பரபர பேட்டி..

Mon May 4 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதே நேரத்தில் இப்படியான முடிவு வரும் என யாரேனும் கூறியிருந்தால், அதை நம்புவது பலருக்கும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. முக்கியமாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தது இந்த தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. […]
udhay

You May Like