தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்..
இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார்.. மேலும் அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.. அப்போது திருநெல்வேலி, சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிக்கப்படும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தற்போது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கும் நிலையில் முதல்வரின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நெல்லை தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த முறை திமுக வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்த தொகுதியில் திமுக தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார். மேலும் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து திருநெல்வேலியில் திமுக வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஆலோசனை வழங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன..
Read More : திமுக – தவெக இடையே தான் போட்டி.. அதிமுகவுக்கு 3-வது இடம் தான்.. அடித்து சொல்லும் டிடிவி தினகரன்..!



