பொன்முடி பதவியில் நீடிக்கவேண்டுமென்றால் இதை செய்தாகவேண்டும்!… குறிவச்ச நீதிமன்றம்!… எப்போது விசாரணை?

கடந்த 2006 – 2011 கால கட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராகவும், கனிம வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான அதன்பிறகு வந்த அதிமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு போட்டது. இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு விடுவித்தது. ஆனாலும் விடாத லஞ்ச ஒழிப்புத் துறை 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்தது உறுதியாகியுள்ளதாக அறிவித்தார். அத்துடன், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக இழந்தார். அதே சமயம் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்களுக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு ஜனவரி 3ஆம் தேதி மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் பொன்முடி தரப்பு தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டார். இதனால் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை செல்ல வேண்டிய அவசியமில்லை. எனினும், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

மேல்முறையீட்டு வழக்கை 90 நாட்களுக்குள் விசாரணைக்கு கொண்டு வந்து தீர்ப்புக்கு தடை உத்தரவு பெற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பொன்முடி இழந்த அமைச்சர், எம்.எல்.ஏ பொறுப்புகளை பெற முடியும். இதனால் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் அவரது தரப்பு வழக்கறிஞர்களில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் பொன்முடியின் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படியென்றால் பிப்ரவரி மாதம் விசாரணை நடக்க வாய்ப்புள்ளது.

Kokila

Next Post

Breaking: காலையிலேயே சென்னையில் வருமான வரி மற்றும் ED அதிகாரிகள் சோதனை...!

Fri Jan 19 , 2024
சென்னையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகர் 80ஆவது தெரு ரமணியம் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை யானைக்கவுனியில் கவர்லால் மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மருந்து நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருமான வரித் […]

You May Like