நோட்…! பேருந்துகள் நிற்கவில்லை என்றால் உடனே 149 எண்ணுக்கு புகார் செய்யலாம்…!

பெண்களுக்கான இலவசப் பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறத்திலேயே மாற்றம்..! போக்குவரத்துத்துறை அதிரடி..!

சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். மகளிர் இலவச பேருந்தை அறிமுகம் செய்த பிறகு பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தத்தில் நிற்காமல் ஓட்டுநர்கள் கடந்து செல்வதாக தொடர்ந்து புகார்கள் அரசுக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் விதமாக கட்டணமில்லா இலவச எண்ணெய் போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்காவிட்டால் 149 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பேருந்துகளின் வழித்தட எண், வாகனப் பதிவு எண் அல்லது பேருந்து நிறுத்தம், நேரம் மற்றும் நிறுத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிப்போ எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, 149 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இனி வரும் காலங்களில் பொதுமக்கள் 149 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தி, பயணிகள் புகார்களைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆய்வில் அதிர்ச்சி..! மற்ற நாடுகளை விட இந்தியாவில், குழந்தைகளுக்கான செர்லாக்கில் அதிக சர்க்கரை..!

Sat Apr 27 , 2024
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செர்லாக் உணவில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் செர்லாக்கில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த சா்வதேச குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பான (ஐபிஎஃப்ஏஎன்) என்ற தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘நெஸ்லே’ நிறுவனம் சாா்பில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ‘செர்லாக்’ உணவுப் பொருளுடன் […]

You May Like