அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது.. அதிமுக – தவெக கூட்டணி சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.. எனவே தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் சரியான தலைவர்.. சரியான முடிவை எடுக்காததால் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது..
ஆந்திராவில் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கிய போது தான் சரியான முடிவை எடுக்காததால் தோல்வி அடைந்தார்.. சிரஞ்சிவீயின் தம்பி பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் தான் துணை முதல்வராக உள்ளார்.. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை மிகச்சரியாக பயணிக்கிறது.. ராட்சத பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டும்..” என்று தெரிவித்தார்..
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்..
மேலும் கரூர் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளதால் விஜய் பாஜக பிடியில் சிக்கி உள்ளதாகவும், அவர் விரைவில் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று விஜய் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : தமிழ்நாடு சமூக நலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. ரூ. 35,000 சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க..



