தேர்வில் மோசடி செய்தால்.. ஆயுள் தண்டனை வழங்கப்படும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..

தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எச்சரித்துள்ளார்.. .

வினாத்தாள் கசிவு, ஆட்சேர்ப்பில் முறைகேடு ஆகியவை உத்தரகாண்ட மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அங்கிருந்த போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கல் வீச்சு சம்பவத்தில் மொத்தம் 15 போலீசார் காயமடைந்தனர். மேலும் இது தொடர்பாக 13 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்..

வினாத்தாள் கசிவுக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, உத்தரகாண்ட் கவர்னர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மித் சிங் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரகாண்ட் போட்டித் தேர்வில் மோசடிகளை தடுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார். ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து, அவசர சட்டம் தற்போது சட்டமாக மாறியுள்ளது.

இந்நிலையில் கல்சி என்ற பகுதியில் யில் நடந்த விளையாட்டு மற்றும் கலாச்சார விழாவில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “இளைஞர்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் எங்களது அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது. இப்போது ஆட்சேர்ப்புத் தேர்வில் மோசடி செய்தவர்கள் கண்டறியப்பட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதனுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். மாநிலத்தில் கடுமையான நகல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

ஜாமீனில் வெளியே வந்தவுடன் சுத்துப் போட்ட மர்ம கும்பல்..!! சாலையில் ஓட ஓட விரட்டிக் கொலை..!! கோவையில் பயங்கரம்..!!

Mon Feb 13 , 2023
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தவர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி என்கிற சத்தியபாண்டி (32). ஓட்டுநரான இவர், ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் […]

You May Like