சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். சுய நல அரசியல் லாபங்களுக்காக பாஜக உடன் கூடிக் குலைந்து கூட்டணி வைக்க திமுகவோ அதிமுகவோ இல்லை.. நாம் தமிழக வெற்றிக் கழகம். தமிழ் நாட்டின் தலைவர்களை வைத்து பாஜக அரசியல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.
தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய விஜய், மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையம் அமைப்பது அவசியமா..? பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பரிந்துரைத்ததே திமுக அரசு தான் என்றார்.
1500 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 1500 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சர்வ சாதாரணமா போய்ட்டா..? அதுவும் நம் மக்கள் தானே.. எதிர் கட்சியாக இருந்தால் மட்டும் தான் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை வருமா..? விவசாய நிலங்களை அழித்து, 1500 குடும்பங்களை அகற்றி அங்கு தான் விமான நிலையம் அமைக்க வேண்டுமா ஸ்டாலின் சார்..?
பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்கவில்லை என்றால் அவர்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன். இதனால் என்ன பிரச்சனை வந்தால் அதை நான் சந்திக்க தயார். இனியாவது பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசுங்கள்.. உங்கள் அமைச்சர்களோ,, அதிகாரிகளோ இல்லை.. நீங்கள் சந்தித்து பேசுங்கள். அங்குள்ள மக்களுக்கு விமான நிலையம் இங்கு வராது என உறுதி கொடுங்கள்.
பரந்தூர் விமான நிலையம் அமைந்தபின் வெள்ளம் வந்தால் சென்னை மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் பரந்தூரில் தான் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பது ஏன்..? என கேள்வி எழுப்பினார்.
Read more: BREAKING| சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய்..! – தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்