’’சிம்கார்டு தானே ’’ என போலியான தகவல் அளித்தால் அவ்வளவுதான்…

மொபைல் சிம்கார்டு வாங்குவதற்கு போலியான ஆவணங்களை அல்லது போலியான எண் வழங்கினால் உங்களுக்கு அது ஆப்பாக முடியும்.

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022ன் புதியதாக தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு கூறியுள்ளது படி போலி ஆவணங்களை வழங்கி இருந்தாலோ , வெரிபிகேசனில் தில்லுமுல்லு செய்திருந்தாலோ ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும்.

போலியான ஆவணங்களில் புகைப்படங்கள் மாற்றி கொடுத்திருத்தல் , பெயர் மாற்றிக் கொடுத்தல் போன்றவை குற்றங்களாக கருதப்படும். தொலைத் தொடர்பு சேவை மூலம் எண்ணற்ற இணையதள மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இதை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போது பல எண்கள் போலி ஆவணங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. எனவே இதை தடுக்கும் நோக்கத்தில் இந்த விதிகள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தகவல் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப், ஜும் , கூகுள் , டியோ போன்ற தொலைத் தொடர்பு உரிமத்தின் கீழ் இந்த மசோதா கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிரூபர்களின் இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரிகை செய்திகள் வெளியிடுபவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கட்டணங்கள் , அபராதங்கள் பற்றி இதில் பேசப்பட்டுள்ளது. பொதுபாதுகாப்பு இறையாண்மை , ஒருமைப்பாடு இந்தியாவின் பாதுகாப்பு வெளி மாநிலங்களுடனான நட்புறவு , பொது ஒழுங்கு அல்லது குற்றத்தை தூண்டுதல் போன்ற செய்திகளுக்கு விலக்கு அளிக்கப்படாது. எனவே வாட்சப்  மற்றும் பொது வலைத்தலங்களில் தவறான, பொய்யான கருத்துக்களை தெரிவிக்க முடியாது.

Next Post

டி20 உலகக் கோப்பையில் இருந்து  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

Thu Sep 29 , 2022
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த  அனுபவம் மிக்க பவுளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார். மீதம் உள்ள […]

You May Like