தொடரும் பரபரப்பு…! கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம்… 5 பேர் அதிரடியாக கைது…!

கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் நேற்று முன்தினம் நடந்த கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்ற 25 வயதான இளைஞர் என்பது தெரியவந்தது. கார் வெடி விபத்தில் இறந்த ஜமேசா முபின் அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது.

ஜமேசா முபின் வீட்டைச் சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்கத் தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இறந்தவருடன் தொடர்பிலிருந்த நபர்களை தமிழக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

அவர் பயன்படுத்திய அந்த கார் கார் 9 பேரிடம் கைமாறியுள்ளது. தொடர்ந்து இது குறித்து வேகமாக விசாரணை நடத்தி காரை யார் வாங்கினார் என்பது குறித்தும் சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அசாருதீன் ரியாஸ் ஒலித்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Vignesh

Next Post

இன்று இந்த 21 மாவட்டத்தில் கனமழை...! சென்னை வானிலை ஆய்வு மையம்

Tue Oct 25 , 2022
தமிழகத்தில் 21 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை […]

You May Like