நாம் தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் நம் ஆயுட்காலத்தையும், உடல் நல தரத்தையும் நிர்ணயிக்கிறது. உடற்பயிற்சி, தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமானவை என்றாலும், உணவு தேர்வு உடல்நலத்துக்கு இன்னும் அதிகமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இன்று உங்கள் உணவில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அர்பித் பன்சால், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், உங்கள் ஆயுளை 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கக்கூடிய எளிய உணவு பழக்க மாற்றங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்..
அவரின் பதிவில் “உங்களின் ஆயுளில் 10 ஆண்டுகளை கூடுதலாக சேர்க்கும் ரகசியம் மருந்து கூடைகளில் இல்லை… அது உங்கள் சமையலறையில் தான் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.. இயற்கை கொழுப்புகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவோர் சராசரியாக 10 முதல் 13 ஆண்டுகள் கூடுதலாக வாழும் வாய்ப்பு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
அப்படி என்றால், நாம் என்ன சாப்பிட வேண்டும்?
டாக்டர் பன்சால் இதை மூன்று பகுதிகளாக பிரித்து விளக்குகிறார்:
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் (Fermented foods)
“தயிர், பழைய சாதம் கஞ்சி, இட்லி போன்றவை குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கியமான குடல் அமைப்பு வயதை மெதுவாகச் செய்யும் மிக முக்கிய ரகசியங்களில் ஒன்று,” என்று அவர் கூறுகிறார்.
நிறமுள்ள பழங்கள் (Colourful fruits)
“நெல்லிக்காய், பெர்ரிகள் மற்றும் பல நிறமுள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்த பழங்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து டி.என்.ஏவை பாதுகாக்கின்றன. இது இயற்கையாகவே முதுமையை தாமதமாக்குகிறது,” என்று டாக்டர் பன்சால் தெரிவித்துள்ளார்.
காய்குறிகள் மற்றும் விதைகள் (Nuts and seeds)
“தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஆபத்து 25% வரை குறையலாம்,” என்று அவர் கூறுகிறார்.
மேலும் டாக்டர் பன்சால் “ நீண்ட நாள் வாழ்வது (longevity) என்பது வெறும் வயதை அதிகப்படுத்துவது மட்டுமல்ல; வாழ்க்கைத் தரத்தையும், உடல் சக்தியையும் மேம்படுத்துவது கூட முக்கியம். இவை அனைத்தும் நாம் தினமும் சாப்பிடும் உணவிலிருந்தே தொடங்குகிறது. சரியான உணவுத் தேர்வுகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம், நீங்கள் அசாதாரணமான உடல் நல நன்மைகளை பெற முடியும். நீண்ட ஆயுள் என்பது ஒரு எண்ணிக்கை மட்டும் இல்லை… அது ஒரு மனப்பாங்கு (mindset),” என அவர் குறிப்பிட்டு தனது பதிவை முடித்தார்…
Read More : காலையில் காபி குடிக்கிறீங்களா? ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிஞ்சுக்கோங்க..!



