கல்வான் மோதல் மற்றும் இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது..
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி சில கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக 2020-ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன ராணுவத்தால் இந்திய ராணுவம் தாக்கப்பட்டதாக ராகுல்காந்தி கூறியிருந்தார்.. மேலும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் 2000 சதுர கி.மீ நிலத்தை சீனர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து ராகுல்காந்தி மீது உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ராகுல்காந்திக்கு சரமாரிக் கேள்வி எழுப்பினர்.. “2000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள், நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், அப்படிச் சொல்ல மாட்டீர்கள்” என்று ராகுல் காந்தியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, தகுந்த ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்..
“நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் தானே.. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசாமல், சமூக ஊடகங்களில் பதிவிட்டது ஏன்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..மேலும் இந்த வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக்கும், வழக்கில் புகார் அளித்தவருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, ராகுல் காந்திக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மன் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்தபோது இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது..
இந்தப் புகார் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் தலைவர் வாதிட்டார். இந்த முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் மே 29 அன்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
Read More : யார் இந்த ஷிபு சோரன்? 3 முறை முதல்வர் முதல் நவீன ஜார்க்கண்டின் தந்தை வரை.. கடந்து வந்த பாதை..