இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்.. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம்!

cf76c53ed7fadf6de0c541d8f966b79affd2500a4823088f1e71289ee63ff9a1

50 ஆண்டுகளாக இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் பெயர் தற்போது ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ அஞ்சல் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளது. அவரது இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், புகைப்படம் இடம்பெற்ற சிறப்பு நினைவு அஞ்சல் தலைகள் மெல்போர்னில் வெளியிடப்பட்டுள்ளன.


செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு, விக்டோரியா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. Australia Post வெளியிட்ட வரையறுக்கப்பட்ட பதிப்பு அஞ்சல் தலைகளை விக்டோரியா மாநில நிதியமைச்சர் Enver Erdogan MP அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, இளையராஜாவிடம் வழங்கினார்.

திரைப்பட இசைத்துறையில் இளையராஜா அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடத்தப்படும் ‘Ilaiyaraaja 50’ உலகச் சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த கவுரவ நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இந்த சர்வதேச கவுரவத்தை ஏற்றுக்கொண்ட இளையராஜா, தனது வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்ந்தார். தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கிய பயணம், இசையின் மூலம் திரைப்படத் துறையையும் கடந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு தன்னை அழைத்துச் சென்றதாக அவர் தனது உரையில் பகிர்ந்துகொண்டார்.

உலக மேடையில் கிடைத்த இந்த அங்கீகாரம் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், தனது இசைப் பயணம் இவ்வளவு தொலைவு செல்லும் என்று ஆரம்பத்தில் நினைத்ததில்லை என்றும் இளையராஜா குறிப்பிட்டார். இசையே தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திரையிசையில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் இளையராஜா, 1,500-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் அவரது இசைப் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.

‘இசைஞானி’, ‘மேஸ்ட்ரோ’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை உலக அளவில் கொண்டாடும் நிகழ்வாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த கவுரவ நிகழ்வு அமைந்துள்ளது.

Also Read: ரூ.13.78 லட்சம் ரொக்கம்.. ரூ.1.59 கோடி G-Pay பரிவர்த்தனை; அரசு அலுவலகங்களில் நடந்த ரெய்டால் தமிழகத்தில் பரபரப்பு!

Saranya

Next Post

SIR விவகாரம்!. தேர்தல் ஆணையத்தில் மோதல்... வெடித்தது புது சர்ச்சை!

Wed Sep 23 , 2026
சிறப்பு தீவிர திருத்த முறைமை (Special Intensive Revision – SIR) தொடர்பான முடிவுகளில் தேர்தல் ஆணையத்திற்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான ஊடக செய்திகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் மறுத்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் மூன்று ஆணையர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடன் தான் SIR உள்ளிட்ட இந்திய தேர்தல் […]
Election Commission 30kb

You May Like