பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 டிசம்பர் 30 வரை விலக்கு…! மத்திய அரசு அறிவிப்பு…!

cotton 2025

பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது.


இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) இறக்குமதி வரிக்கான விதி விலக்கை மத்திய அரசு நீடித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அதுதவிர, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வரை அமலில் இருக்கும்.

ஜவுளித் துறை உள்பட இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை இந்தியா நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

Vignesh

Next Post

மகிழ்ச்சி..! விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு... தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

Sat Aug 30 , 2025
விவசாய மின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.09.2021 அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்கள். […]
EB Bill 2025

You May Like