வீடு கட்ட போகும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவு…!

Tn Government registration 2025

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.


அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக மனைக்கான கிரைய பத்திரம் மற்றும் கட்டுமான ஒப்பந்த ஆவணம் ஆகியவை தனித்தனியாக பதிவு செய்யப்படுகிறது.

பிரிக்கப்படாத பாக மனையின் கிரைய ஆவணத்துக்கு, தற்போதுள்ள நடைமுறையில் மனையின் சந்தை வழிகாட்டி மதிப்புக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தத்துக்கு குடியிருப்பின் கட்டுமான விலைக்குதலா ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் கடந்த 2023 ஜூலை முதல் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு, கட்டுமான விலைக்கு 1 சதவீதம் முத்திரைத் தீர்வை, 3 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்னதாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தரைத்தளம் ரூ.11685, முதல் தளம் ரூ.10830, இரண்டாவது தளம் ரூ.11025 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ‌.

Vignesh

Next Post

"வேலையில்லாமல் இருக்கும் கணவரை இழிவுப்படுத்தி திட்டுவது கொடுமைக்கு சமம்"!. உயர் நீதிமன்றம் கருத்து!

Sat Aug 23 , 2025
கணவன் வேலை இன்றி இருக்கும் நிலையிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு கொண்டிருக்கும் காலத்திலும், அவரை இழிவுபடுத்துவது அல்லது நியாயமற்ற கோரிக்கைகளை வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்கு சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி ரஜனி துபே மற்றும் நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கும்போது இந்தக் கருத்தை வெளியிட்டது. அதாவது COVID-19 தொற்றுநோய் காலத்தில் வேலை இன்றி இருந்த கணவனை […]
divorce1

You May Like