ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு…! சான்றிதழ் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 7-ம் தேதி வரை அவகாசம்…!

trb teachers recruitment board

மாநில தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதி தேர்வு (செட்) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இடஒதுக்கீடு வழங்கி உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb. In.gov.in) ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்வோர் மட்டுமே முன்னுரிமை கோர முடியும்

Vignesh

Next Post

உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...! இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை...?

Fri Jul 25 , 2025
நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று […]
rain 1

You May Like