இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் அட்டை வெறும் அடையாளச் சான்று அல்ல; ஒவ்வொரு குடிமகனின் டிஜிட்டல் அடையாளத்தின் முதுகெலும்பு ஆகிவிட்டது. அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது, வங்கிக் கணக்கு திறப்பது, பள்ளி சேர்க்கை எதிலும் ஆதார் கட்டாயமாகிறது. ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் தவறாகவோ, பழையதாகவோ இருந்தால் அவற்றை சரி செய்து புதுப்பிப்பது மிக அவசியம் என்று UIDAI அறிவுறுத்துகிறது.
ஆதாரை ஏன் புதுப்பிக்க வேண்டும்? உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருந்தும், எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றால், அதைச் சரிபார்த்து, தேவையானால் புதுப்பிக்க வேண்டும். அரசாங்க சேவைகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க இது முக்கியம்.
UIDAI, பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களை ஆன்லைனில் (MyAadhaar போர்ட்டல் வழியாக) ஜூன் 14, 2026 வரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை வழங்கியுள்ளது. ஆனால், ஆதார் சேவா கேந்திரம் சென்று புதுப்பித்தால் அதிகபட்சம் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
வீட்டிலிருந்தே ஆதாரை எவ்வாறு புதுப்பிப்பது?
* UIDAI வலைத்தளத்திற்கு செல்லவும்: https://myaadhaar.uidai.gov.in
* உங்கள் ஆதார் எண் மற்றும் OTP கொண்டு உள்நுழையவும்.
* “ஆவண புதுப்பிப்பு” பகுதியைத் தேர்ந்தெடுத்து தகவலை சரிபார்க்கவும்.
* அடையாளம்/முகவரிக்கான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
* அடையாளச் சான்று: பான் கார்டு, வாக்காளர் அட்டை.
* விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் 14 இலக்க URN எண் கிடைக்கும்; இதன் மூலம் நிலையை கண்காணிக்கலாம்.
* UIDAI விதிகளின்படி, குழந்தைகளின் ஆதார் 5 வயதிலும், 15 வயதிலும் கட்டாயம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
Read more: ரூ.1500 முதலீடு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்.. சூப்பரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!