விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர் நாச்சியார் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் ஒரு மகள் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்றொரு மகள் காவியா(15) அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
காவியா அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாணியன் மகன் ஆகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 மாதமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆகாஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த காவியா ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆகாஷ் காவியா வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து மன வருத்தத்துடன் பேசியுள்ளனர். எப்படியும் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஆகாஷும், காவியாவும் தற்கொலை செய்து கொண்டனர். காவியாவின் தாய் வீட்டில் வந்து பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சிக்கலான எலும்பு முறிவுகளை சரிசெய்யக்கூடிய Glue Gun..! விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!