இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 8.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்–ஜூன் காலாண்டின் 7.8% வளர்ச்சியை விட அதிகம். உள்நாட்டு நுகர்வு (consumer spending) அதிகரித்தது, உற்பத்தித் துறை (manufacturing) வலுவாக செயல்பட்டது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது..
உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும் இந்த 2 துறைகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றின. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் ஜூலை–செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி 7.3% இருக்கும் என்று கணித்திருந்தனர். ஆனால் அந்த காலத்தில் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு கூடுதல் 25% வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தி இருந்தது.
இப்படியான சூழ்நிலையிலும், இந்தியாவின் தனியார் நுகர்வு செலவு (Private consumer spending) இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 57% பங்கைக் கொண்டது.. ஜூலை–செப்டம்பரில் 7.9% உயர்ந்தது. முந்தைய காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) இது 7.0% மட்டுமே உயர்ந்திருந்தது.
அதாவதி, அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக வரி விதித்த போதிலும் இந்திய மக்கள் செலவு (நுகர்வு) மேலும் உயர்ந்தது, இதுவே GDP வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்துள்ள கூடுதல் வரிகள் (குறிப்பாக ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்கான தண்டனை வரிகள்) மற்றும் உலக சந்தைகளில் குறைந்துள்ள தேவை ஆகியவற்றின் தாக்கத்தை சமநிலைப்படுத்த, இந்தியா செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு வரி குறைப்புகளை அறிவித்தது.
துறைகளின் செயல்திறன்
உற்பத்தித் துறை (Manufacturing)
ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 9.1% வளர்ச்சி
இதற்கு முந்தைய காலாண்டில்: 7.7%
உற்பத்தித் துறை வளர்ச்சி மேலும் வேகமடைந்தது.
கட்டுமானத் துறை (Construction)
இந்த காலாண்டில் 7.2% வளர்ச்சி
முந்தைய காலாண்டில்: 7.6%
சிறிது குறைந்தாலும், நல்ல வளர்ச்சி தொடர்கிறது.
அரசு செலவில் குறைவு
ஜூலை–செப்டம்பர் காலாண்டில் அரசு செலவு 2.7% குறைந்தது
முந்தைய காலாண்டில்: 7.4% உயர்வு
அரசு செலவு இந்த காலாண்டில் கணிசமாக குறைந்துள்ளது.
எனவே உலகளாவிய சந்தை மந்தம் & அமெரிக்க வரிகளின் தாக்கம் காரணமாக இந்தியா பொதுமக்கள் பயன்பாட்டு பொருட்களுக்கு வரி குறைத்தது. உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் வளர்ச்சி காட்டின.
வலுவான உள்நாட்டு தேவை, அரசின் நிலையான செலவுகள், மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகியவை, உலக வர்த்தகத் தடுமாற்றங்கள் இருந்தாலும், 2025/26 ஆம் ஆண்டின் மீதியிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் குறைவு
அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் (Retail Inflation) 0.25% ஆக சரிந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவு குறைவாகும். பணவீக்கம் இவ்வளவு குறைந்ததால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிசம்பர் மாத பணவியல் கொள்கை ஆய்வில் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேவை அதிகம் + அரசு செலவுகள் தொடர்ந்து உள்ளது + விலை உயர்வு மிகவும் குறைவு. 2025/26 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.
Read More : டிட்வா புயல்: இலங்கையில் 56 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்..! நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா!



