இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் போட்டிக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் போட்டியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அக்டோபர் 16, 2025 அன்று அறிவித்தது. போட்டிகளின் விவரங்கள் https://www.trai.gov.in/dcra-portal என்ற ஆணையத்தின் வலைத்தள இணைப்பில் இடம்பெற்றுள்ளன. போட்டிக்கான உள்ளீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 05, 2025 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
உள்ளீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கடைசி தேதியை நவம்பர் 15, 2025 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள், உள்ளீடுகளை digital-rating@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு, டிராய் ஆலோசகர் திரு தேஜ்பால் சிங்கை +91-11-20907759 என்ற எண்ணில் பங்குதாரர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



