17,000 அடி உயரத்தில் மின்னல் தாக்கியதில் இண்டிகோ விமானம் சேதம்!. அவசர தரையிறக்கம்!. பயணிகளின் நிலை என்ன?

IndiGo flight lightning 30kb

பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக புதன்கிழமை அன்று சுமார் 17,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது பயங்கர மின்னல் தாக்கியது. 104 பயணிகளுடன் சென்ற இந்த விமானத்தின் முன் பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. இருப்பினும், விமானி திறம்படச் செயல்பட்டதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்; இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.


பாட்னா விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3:10 மணிக்குக் கிளம்பிய இண்டிகோ விமானம் 6E925, மாலை 4:20 மணிக்கு லக்னோவைச் சென்றடைய வேண்டும். ஆனால், லக்னோவை நெருங்கும்போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, மாலை 4:05 மணியளவில் லக்னோவில் பத்திரமாகத் தரையிறங்கியது. மின்னல் காரணமாக விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தாலும், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் லக்னோ விமான நிலையத்திலேயே தரைதிறக்கப்பட்டது. லக்னோவிலிருந்து அகமதாபாத் செல்ல வேண்டிய 6E6968 இண்டிகோ விமானமாக இந்த விமானம் இயக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும், உடனடியாக விமான நிறுவனம் மற்றொரு மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி, அனைத்துப் பயணிகளும் மாலை 6:22 மணியளவில் மாற்று விமானம் மூலம் அகமதாபாத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பு, ஜூன் 19 அன்று கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அகதலா செல்லவிருந்த அந்த விமானத்தில் மின்னல் தாக்கியதால் மின்சார அமைப்பு பாதிக்கப்பட்டது. அதிலிருந்து 141 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பத்திரமாக இறக்கிடப்பட்டு, பின்னர் மாற்று விமானம் மூலம் அகதலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அப்போதைய சம்பவத்தில் இரண்டு தரை ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.

கடந்த மாதம், கவுகாத்தியில் இருந்து பெங்களூர் வந்த இண்டிகோ விமானம், பெங்களூர் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இரண்டாவது முயற்சியில் திடீரென ‘டெய்ல் ஸ்ட்ரைக்’ (Tail Strike) விபத்தில் சிக்கியது. சீரற்ற காற்று வீசிய மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் அசாதாரண உரசல் ஏற்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது. விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் தற்போது பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேவையான அனுமதிகள் பெறப்பட்ட பின்னரே அது மீண்டும் இயக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

"வேலையில்லை, வயது குறைவு"... உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் 9 இந்திய வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு!.

Thu Oct 8 , 2026
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ள U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவிருந்த 9 இந்திய மல்யுத்த வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் பங்கேற்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற விசா நேர்காணலில் கலந்துகொண்ட இந்திய அணியைச் சேர்ந்த 9 வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. இந்தியக் குழுவிலிருந்து மொத்தம் 24 பேர் கொண்ட குழுவில் 16 மல்யுத்த வீரர்களும் நேர்காணலில் பங்கேற்றனர். […]
World Wrestling Championship 30kb

You May Like