கதவை திறக்காமல் 3 நாட்களாக வீட்டுக்குள் !!! ஜே.சி.பி.ஐ வைத்து கதவை உடைத்த சம்பவம் !! பரபரப்பு ..

வீட்டின் கதவை திறக்காமல் 3 நாட்களாக கதவை திறக்காமல் பூஜை செய்ததால் வீட்டில் நரபலியா ? என்று சந்தேகம் எழுத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.விநகரம் என்ற பகுதியில் தவணி – காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூபாலன் , பாலாஜி என்ற மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றர்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த காளிப்பிரியா என்பவரைத்தான் பூபாலன் என்பவர் திருமணம் செய்துள்ளார். இருவரும் சென்னையில் காவலராக பணியாற்றுகின்றனர். கோமதி என்பவர் அரியப்பாடியைச் சேர்ந்த பிரகாசை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 3 நாட்களாக தவமணி வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் ஆள் இருப்பது மக்களுக்கு தெரிந்தது. மந்திரம் , மாந்திரீகம் செய்வது போல பூஜை நடந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்க்தினர். தவமணி குடும்பத்தினரை அழைத்து பார்த்தனர். யாரும் வெளியே வரவில்லை. இதனிடையே உள்ளே நரபலி கொடுக்க பூஜை நடந்து வருவதாக தகவல் பரவியது. இதனால் போலீசுக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் தட்டிப் பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனை அடுத்து தீயணைப்புத்துறை வந்தனர். ஜே.சி.பியுடன் வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களை போலீசார் மீட்டனர். விசாரித்தபோது  கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோமதி என்பவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவருக்கு பேய் பிடித்ததாக கூறியுள்ளனர். இதனால் பேய் ஓட்டுவதற்கான பூஜை என தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Post

உடல்களை துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த தம்பதி..!! வீட்டு வளாகத்தில் எலும்புத் துண்டு..!! வெளியான புதிய தகவல்..!!

Sun Oct 16 , 2022
கேரளா நரபலி விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் […]
நரபலிக்கு முன் பெண்ணின் உடலை கத்தியால் கீறி கறி மசாலா தடவிய கொடூரம்..!! பார்த்து ரசித்த பயங்கரம்..!!

You May Like