மீண்டும் மாஸ்க் கட்டாயம்!… தீவிரமடையும் கொரோனா!… சுகாதார அதிகாரிகள் கவலை!

அமெரிக்காவில் COVID, Flu, RSV மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்படி, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 20.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதேபோல், டிசம்பர் 9ஆம் தேதி வரை 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் இதுவும் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசிகள் இருந்தபோதிலும், மூன்று நோய்களுக்கான தடுப்பூசி விகிதங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன, இது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குளிர்கால வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி மட்டுமே உதவும் என்றும் எனவே, தடுப்பூசி செலுத்தப்படும் விகிதங்களை அதிகரிக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வைரஸ் பாதித்தவர்களுக்கான பூஸ்டர் ஷாட்கள் மற்றும் புதிய தடுப்பூசிகள் கிடைத்தாலும், தடுப்பூசி விகிதம் ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவாகவே உள்ளது என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தநிலையில், வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் கிளினிக்குகள் என அனைத்து இடங்களிலும் மாஸ்க் காட்டாயம் அணியவேண்டும் என்றும் கைகளை அடிக்கடி கழுவவேண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வது உள்ளிட்டவைகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Kokila

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! இன்னைக்கு லீவு..!! மறந்தும் அந்தப் பக்கம் போகாதீங்க..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Tue Jan 16 , 2024
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புகள் கடந்த 9ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு […]

You May Like