தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி…! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்…!

Delhi 2025

தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக அமையும் என்று கூறலாம்.

டெல்லி போன்ற பெருநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் மாசுபாடு அடைந்த காற்றை தினந்தோறும் சுவாசிப்பதால் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வானிலை, மாசுபாடு, சுற்றுச்சூழல் நிலைமைகள், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் காற்றால் பரவும் நுண்கிருமிகள் பற்றியும் இதன் காரணமாக நோய் பரவுவதையும் குறித்த புரிதல் தொற்றுநோய்கள் குறித்து கணிக்கவும், நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்தவும் குடிமக்களைப் பாதுகாக்கவும், அரசுகளுக்கும், சுகாதார நிபுணர்களுக்கும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விரைவில் முடிவுக்கு வரும் கார்த்திகை தீபம்..? க்ளைமாக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்டா.. ரசிகர்கள் ஷாக்!

Wed Sep 3 , 2025
Karthigai Deepam to end soon..? Such a twist in the climax.. Fans are shocked!
karthigai deepam3

You May Like