ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஐபோன் என்றாலே இந்தியர்களுக்கு ஒரு மோகம் இருக்கும். ஐபோன்களின் விலை அதிகம் என்றாலும் அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் ஐபோன்களுக்கு மவுசு அதிகம். அப்படி ஐபோன் வாங்க நினைத்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஐபோன் வாங்கலாம்.

அதாவது, ஃபிளிப்கார்ட்டில் ஐபோன்களுக்கு சிறப்புத் தள்ளுபடி கிடைக்கிறது. கவர்ச்சிகரமான பரிமாற்றச் சலுகையும் உள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள், கேஜெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. இவற்றில் ஐபோன் 15 மாடலும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஐபோன் 15 தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விலை 79,900 ரூபாய்.

இந்த ஐபோனின் அடிப்படை விலையில் 13,901 ரூபாய் வரை ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ஐபோன் 15 மாடலை நீங்கள் வெறும் 65,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. உங்கள் பழைய மாடல் ஐபோனை மாற்றிவிட்டு புதிய போனை தள்ளுபடி சலுகையில் வாங்க முடியும். இதில் உங்களுக்கு 59,000 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

மேலும், நீங்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் வங்கியின் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும். இது தவிர மேலும் பல வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் EMI சலுகைகளும் கிடைக்கின்றன. மாதத்திற்கு வெறும் ரூ.2,321 செலுத்தி நீங்கள் இந்த போனை வாங்கிக் கொள்ளலாம்.

Read More : முதல் ஆளாக போட்டியின்றி மக்களவை எம்பியாகிறார் பாஜக வேட்பாளர்..!! யார் தெரியுமா..?

Chella

Next Post

’43 வயதில் திருமணம் செய்தது ஏன்’..? முதல்முறையாக மனம் திறந்த நடிகை லாவண்யா..!!

Mon Apr 22 , 2024
திரைப்படங்கள் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லாவண்யா, தனக்கு 43 வயதில் திருமணம் ஆனது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். நடிகை லாவண்யா, 1997ஆம் ஆண்டு வெளியான சூரிய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கேரக்டரில் அறிமுகம் ஆகி தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், வெள்ளி திரையில் மட்டுமின்றி, பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும், இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் […]

You May Like