ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் இன்று சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாக்பூர், முன்னாள் தளபதி ஹுசேன் சலாமி கொல்லப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் சுமார் 260 நாட்கள் ஐஆர்ஜிசி தளபதியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், முகமது பாக்பூர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை “எந்தவித தவறான கணிப்பிலும் ஈடுபட வேண்டாம்” என்று எச்சரித்திருந்தார். மேலும், “துப்பாக்கி நெட்டியில் விரல் வைத்த நிலையில், ஈரான் முன்பை விட அதிகமாக தயாராக உள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார்.
2025ஆம் ஆண்டில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி பாக்பூரை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தினார். அப்போது, ஐஆர்ஜிசியின் திறன், தயார்நிலை மற்றும் உள்நிலை ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார்.
ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய எச்சரிக்கை அமலில் உள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து தங்கள் வான்வெளியை மூடிய நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கும், பல விமான நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
மேலும், தெஹ்ரானின் சில பகுதிகளில் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டுவிட்டது.. ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு, இஸ்ரேல் ராணுவம் ஆப்ரேஷன் ரோரிங் லயன் என்ற பெயர் வைத்துள்ளது..
இந்த நிலையில் இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது.. ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தியவர்களை அவர்களின் செயல்களுக்கு வருத்தப்பட செய்வோம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக முழுமையாக தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



