திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல் திமுக இரண்டாது முறையாக ஆட்சியை அமைத்து வரலாற்றை மாற்ற வேண்டும் குறிக்கோள்களுடன் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்சியில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருகின்றனர். உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் `ஒன் டூ ஒன்’ என்ற சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் தனித்தனியே சந்தித்து வருகிறார். அப்போது புகாருக்கு உள்ளாகும் நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.



